லாரி நிறைய குக்கர்கள் பறிமுதல்

 

லாரி நிறைய குக்கர்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டத்தில் 2 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட 3,520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஒரு மாத காலமே அவகாசம் இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பரப்புரை என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிடிவி தினகரன் தலைமையில் இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியது.

லாரி நிறைய குக்கர்கள் பறிமுதல்

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் சமத்துவபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சென்னை கும்மிடிபூண்டியிலிருந்து தஞ்சைக்கு 2 லாரிகளில் 220 பெட்டிகளில் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்களில் டிடிவி தினகரன் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கருதப்பட்டது. இதனையடுத்து அனைத்தையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.