சைக்கிளிங் சென்ற போது சிறுவனிடம் கல்வி குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்த முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்த சிறுவனிடம் கல்வி குறித்து கேட்டறிந்தார். 

tn

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பரபரப்பாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  கடந்த ஆண்டு மே மாதம் முதல்வராக பதவியேற்ற நாள் முதல் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகிறார்.  அதேசமயம்  தனது உடல் நலனிலும், ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டும் முதல்வர் ஸ்டாலின், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி உள்ளிட்ட விஷயங்களை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.  அந்தவகையில் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளில் செல்வதை ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார்.  கிடைக்கும் நேரத்தில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ஸ்டாலினுடன் அவரது மருமகன் சபரீசன் இருப்பதும்  வழக்கம்.  அதேபோல் வழியில் டீக்கடை இருந்தால் அங்கு இளைப்பாறுவது ,பொது மக்களுடன் பேசுவது, செல்பி எடுப்பது போன்ற விஷயங்களும் இந்த தருணத்தில் நடைபெறும்.

ttn

அந்த வகையில் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் சைக்கிளின் மேற்கொண்டார்.  அப்போது வழியில் டீக்கடை ஒன்றில் அமர்ந்து இளைப்பாறிய ஸ்டாலின்,  அங்கிருந்த சிறுவன் ஒருவனை அழைத்து பேசினார்.  ஆன்லைனில் படிக்கிறாயா? எந்த பள்ளியில் படிக்கிறாய் ?அந்த பள்ளி எங்கு இருக்கிறது என்று அந்த சிறுவனிடம் ஸ்டாலின் கேள்வி எழுப்ப, அதற்கு அந்த சிறுவன் ,கோவளத்தில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறேன் என்று பதிலளிக்கிறார். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.