நெக்லஸால் சர்ச்சை - கரீனா கபூருக்கு நோட்டீஸ்
தீபாவளி கொண்டாட்டத்தின்போது நடிகை கரீனா கபூர் கான் அணிந்திருந்த மரகதக் கல் பதித்த பழமையான அரச குடும்ப நெக்லஸில் குர்ஆனின் வசனம் பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி கொண்டாட்டத்தின்போது நடிகை கரீனா கபூர் அணிந்த 30 காரட் மரகதக் கல் பதித்த நெக்லஸ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகையில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனின் முக்கிய வசனம் ஒன்று பொறிக்கப்பட்டிருந்ததால், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, காங்கிரஸ் நிர்வாகி அப்பாஸ் ஹபீஸ் கரீனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் இந்த நகை மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறியிருக்கிறார். மேலும் புகைப்படங்களை நீக்கி, பகிரங்க மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தியுள்ளார் சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்த அரச குடும்ப நகை சயீப் அலிகான் மூலமாக கரீனாவுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

