திருப்பதி லட்டு விவகாரத்தில் சர்ச்சை கருத்து- பவன் கல்யாண் நேரில் ஆஜராக உத்தரவு
திருப்பதி லட்டு விவகாரம் அறிவியில் ஆதாரம் இல்லாமல் இந்துகளின் மனம் புண்படும் விதமாக பேசியதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறியதாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கறிஞர் ராமாராவ் மனு தாக்கல் செய்தார். அக்டோபர் 14 ம் தேதி இந்த மனுவை தாக்கல் செய்தார். இதில் பவன் கல்யாணின் கருத்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண், தன் நிலையை மறந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். உச்ச நீதிமன்றமும் பவன் கருத்துகளை நிராகரித்தது. எனவே பவன் கல்யாண் பேசிய வீடியோக்களை இணையதளத்தில் நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் இம்மனேனி ராமராவ் தனது மனுவில் கேட்டுக் கொண்டார்.
திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து விரிவான விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே ஒரு தனி குழுவை அமைத்துள்ளது. திருப்பதி பிரசாதம் குறித்து பவன் கல்யாண் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற கருத்துகளை கூறுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராமாராவ் தனது மனுவில் கோரியிருந்தார். இதனை விசாரனைக்கு ஏற்ற சிட்டி சிவில் நீதிமன்றம், பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பி அதில் நவம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.


