தேர்தல் முடிந்தும் விஜயை விடாமல் விரட்டும் சர்ச்சை
தவெக தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருச்சி தவெக தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பீட்டா இந்தியா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பீட்டா இந்தியா விலங்கு நல அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் பிரச்சாரங்களில் விலங்குகளை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புறாக்கள் மீது பூசப்பட்ட சாயங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. கூட்டம் மிகுந்த இடத்தில் புறாக்களை கையாள்வது அவற்றுக்கு அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வண்ணம் பூசப்பட்ட புறாக்களை மறுவாழ்வுக்காகப் பீட்டா இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். விலங்குகள் வதையை தவிர்க்க தவெக தலைமை முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

