சர்ச்சைக்குரிய பேஸ்புக் பதிவு- ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது

 
arrest

செங்குன்றம் அருகே தம்பியின் கொலையில் தொடர்புடைய துரோகிகள் வீட்டில் கவுண்ட்டவுன் ஆராம்பம் என முகநூலில் பதிவு செய்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார்.

Image


திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அதிமுக பிரமுகருமான பார்த்திபன் அதிகாலையில் நடைப்பயிற்சி சென்ற போது ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைது செய்ய முயன்ற பிரபல ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய இருவரும் கடந்த அக்டோபர் மாதம் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் கொலை சம்பவம் நடந்து ஓராண்டான நிலையில் பார்த்திபனின் அண்ணனான நடராஜன் தனது தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில் என தம்பி நடத்தி காட்டுவான், துரோகிக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம் என சர்ச்சைக்குரிய வகையில் தமது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது தம்பியின் கொலை தொடர்பாக முகநூலில் மோதல் ஏற்படும் வகையில் பதிவிட்டதாக செங்குன்றம் போலீசார் தகவல் தொழிநுட்ப சட்டம் உட்பட 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் நடராஜனை (58) செங்குன்றம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.