மிக கனமழை எச்சரிக்கை...காரைக்காலில் கட்டுபாட்டு அறை எண்கள் அறிவிப்பு

 
காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமி்ழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தமிழகத்தில் இன்று  கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

rain

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், காரைக்கால் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக பொதுமக்களுக்கு மழை சம்பந்தமான புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண் 04368-228801 மற்றும் 04368-227704 என்ற எண்களுக்கு பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.