மெட்ரோ ரயில் சேவை-ஆய்வு செய்ய 2 தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

 
chennai metro

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் முதல் நல்லூர் சுங்கச்சாவடி வரையிலான விரைவான போக்குவரத்து அமைப்பின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப்பணி,  Almondz Global Infra-Consultant Limited & Four Wall Consultancy ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

metro

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் முதல் நல்லூர் சுங்கச்சாவடி வரை 10 கி.மீ. நீளத்திற்கு விரைவான போக்குவரத்து அமைப்பின் சாத்தியக்கூறுகளுக்கான போக்குவரத்து தேவை முன்னறிவிப்பு அறிக்கையை தயாரிப்பது இப்பணியின் நோக்கம் அடங்கும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன் மற்றும் Almondz Global Infra-Consultant நிறுவனத்தின் தலைவர் திரு.கே.ஆர்.குமார் மற்றும் Four Wall Consultancy நிறுவனத்தின் திட்ட மேலாளர் திரு.ஆர்.தணிகைவேல் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.


இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் திரு.டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பொது மேலாளர்கள் டாக்டர். டி.ஜெபசெல்வின் கிளாட்சன், (ஒப்பந்த மேலாண்மை), திரு.ஆன்டோ ஜோஸ் மேனாச்சேரி, (சுரங்கப்பாதை), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.