முட்டை விலை தொடர் உயர்வு
Nov 3, 2026, 19:03 IST1793712811823
முட்டை ஒன்றின் கொள்முதல் விலை கடந்த 5 நாட்களில் மட்டும் 70 காசுகள் உயர்ந்தது.
நாமக்கல் மண்டலத்தில் 7 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் தமிழகத்தில் சத்துணவு திட்டம் தவிர வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை நாமக்கல்லில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்து ரூ.6.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை தேவை அதிகரித்து வருவதால் கடந்த 5 நாட்களில் மட்டும் 70 காசுகள் உயர்ந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். புதிய கொள்முதல் விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

