“ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படும்” – கண் மருத்துவர்கள் எச்சரிக்கை!!

 

“ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படும்” – கண் மருத்துவர்கள் எச்சரிக்கை!!

செல்போனை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகளின் கண்பார்வை பாதிக்கப்படும் என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை. மாறாக ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.செல்போனை பிள்ளைகள் எடுத்தால் திட்டுவதற்கு பதில் பெற்றோரே செல்போனை குழந்தைகளுக்கு கொடுக்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளன. ஒருபுறம் ஆன்லைன் கல்விக்காக செல்போன்கள் உபயோகிக்கப்பட்டு வந்தாலும் ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு தொடர்ந்து குழந்தைகளால் செல்போன்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது.

“ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படும்” – கண் மருத்துவர்கள் எச்சரிக்கை!!

இந்நிலையில் செல்போனை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பாதிப்பு மற்றும் பார்வை குறைபாடு ஏற்படும் என்று கண் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாணவர்கள் தொடர்ந்து செல்போனை உபயோகித்து வருவதன் மூலம் கண் அழுத்த நோய் மற்றும் கிட்டப்பார்வை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீண்ட நேரம் செல்போன் கணினி, டிவி பார்ப்பதன் மூலமும், சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதாலும், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் நோய்கள் அதிகரிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.

“ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படும்” – கண் மருத்துவர்கள் எச்சரிக்கை!!

இது போன்ற கண் நோய்களை தவிர்க்க செல்போன் மற்றும் கணினி பயன்படுத்துவோர் தொடர்ந்து மூழ்கி இருக்காமல் கண்களை சிமிட்டியபடியும் , அவ்வப்போது சில சிறிது நேரம் இடைவெளி விட்டும் திரைகளை பார்ப்பது நல்லது. அதேபோல் ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்போன்களுக்கு பதிலாக மடிக்கணினி, கணினி போன்ற சற்று பெரிய வடிவிலான திரைகளை பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம்.

தினமும் 3 மணிநேரத்திற்கு மேலாக செல்போனில் மூழ்கிக் கிடந்தால் தீவிர கண் பார்வை குறைபாடு ஏற்படும் நிலையில் கண்ணாடி அணிவதை தாண்டி, அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கண் குறைபாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் ஆரம்ப நிலையிலேயே கண் பாதிப்பு குறித்து பெற்றோர் கண்டறிந்து குழந்தைகளுடன் சேர்ந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.