புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி கேன்சல்- பட்டினப்பாக்கத்தை கைவிட்ட விஜய்

 
vijay

புதிய தலைமைச் செயலகம் கட்டுமான பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி செலவில் 15 மாடி கொண்ட தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே புதிய தலைமைச் செயலகம் கட்டுமான பணிக்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே முதல்வர் விஜய் மீனவர்களை சமாதானப்படுத்தி விட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருந்தார். அதுவரை விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த விவகாரத்தில் தொடர்ந்து மீனவர்கள் உறுதியாக இருப்பதால் புதிய தலைமைச் செயலகம் திட்டப் பணியை கைவிடவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பிறந்தது முதல் மீனவ மக்களோடு மிகவும் நெருக்கமாக இருந்த முதல்வர் விஜய் மீனவ மக்கள் வசிக்கும் பட்டினப்பாக்கம் பகுதியில் தலைமைச் செயலகம் கட்ட விரும்பி இருந்தார். இதன் மூலம் அப்பகுதி மேம்பாடு அடைவதோடு அந்த மக்களின் வாழ்வாதாரமும் உயரும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவர் நினைத்ததற்கு நேர் மாறாக எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் புதிய தலைமைச் செயலகம் திட்டத்தை நிரந்தரமாக கைவிட முடிவு செய்திருப்பதாக முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.