தொகுதி பங்கீடு: காங்கிரஸ் - திமுக நாளை முதல்கட்ட பேச்சு

 
ks alagiri

நாடாளுமன்ற தொகுதி பங்கீடு தொடர்பாக  காங்கிரஸ் - திமுக நாளை முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

arivalayam

 காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது; தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழு, திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அண்ணா அறிவாலயத்தில் நாளை சந்திக்கிறது. காங்கிரஸ் கட்சி விரும்பும் தொகுதிக்கான உத்தேச பட்டியலை நாளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

congressமுகுல் வாஸ்னிக், அசோக் கெலாட், பூபேஷ் பாகெல், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய ஐவர் குழுவினருடன் தமிழக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் செல்வப்பெருந்தகை ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.