“விஜய் தந்தது வெறும் ரூ.500! இதற்கு தான் தமிழ்நாடு உங்கள் பின்னாடி நிற்குமா?’’- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

 
a

இன்று தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டதில் திமுக பேச்சாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அரசியல் சண்டை: அண்ணாமலை மற்றும் தமிழக அரசு கல்விக் கொள்கைகள் தொடர்பாக மோதல்

அப்போது பேசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “நான் தான் தமிழ்நாடு. தமிழ்நாடு தான் நான் என சொல்கிறார். தன்னை சுற்றி தான் தமிழ்நாடு இயங்குகிறது என்ற மனநிலையில் விஜய் இருக்கிறார். 2009ல் இலங்கையில் இன அழிப்பு நடந்தபோது, நடிகர்கள் எல்லாரும் சேர்ந்து நிதி திரட்டினார்கள். சாதாரண திரைத்துறையினர் கூட 5,000 ரூபாய் கொடுத்தார்கள். ஆனால் தம்பி விஜய் கொடுத்தது வெறும் 500 ரூபாய். இதுதான் இனப்பற்றா? இதற்கு தான் தமிழ்நாடு உங்கள் பின்னாடி நிற்குமா? நண்பர் என சொல்லிவிட்டு கரூர் சம்பவத்தில் பழிபோட்டது ஏன் என விஜய் கேட்கிறார். கொலைகாரன கொலைகாரன்னு தான் சொல்ல முடியும். நண்பர் அப்படின்றதால விட்டு விட முடியுமா? தன் உறவினரே ஆனாலும் நண்பரே ஆனாலும் தண்டனை வாங்கி கொடுப்பவர் தான் அரசன். அந்த வகையில் எங்கள் முதல்வர் சரியாக தான் இருக்கிறார்” என்றார்.