சோதனைகளை வென்று சாதனைகள் படையுங்கள்! - சர்வதேச இளைஞர் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து..!!

 
VIJAY

முதல்வர் விஜய் அறிக்கை:

நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்;

புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது.

சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்; உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்;

கனவுகள் நனவாகட்டும்; சாதனைகள் தொடரட்டும்.

இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.