விதிகளை மீறி இணையத்தில் தேர்தல் பரப்புரை- தவெகவினர் மீது புகார்
Apr 22, 2026, 15:45 IST1776852927000
விதிகளை மீறி இணையத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாக தவெக மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்த நிலையில், தவெக பெயரில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்புரை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாசர்பாடியைச் சேர்ந்த தேவ சகாயம் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சைபர் க்ரைம் பிரிவு கண்காணித்து வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நாளன்றும் தவெகவினர் விதிமுறைகளை மீற திட்டமிட்டுள்ளதாகவும், வாக்களிப்பதை வீடியோ எடுத்து ஆன்லைனில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

