திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா காங்கிரஸ்?- நாளை வரை அவகாசம்

 
ராகுல்காந்தி

குறைந்தது 35 சீட் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை என்றால் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேரும் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.

திமுக- காங்கிரஸ் கூட்டணியில் முடிவு எட்டப்படாத நிலையில், திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு நாளை(மார்ச் 03) மாலை வரை கெடு எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே தர திமுக முடிவு செய்துள்ளது. 25 இடங்கள் என்பதை ஏற்க முடியாது என காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி கொடுத்தார். குறைந்தது 35 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி கொடுக்கவில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதேசமயம் நாளைக்குள் முடிவு செய்யவில்லை என்றால் தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பை வெளியிட திமுக திட்டமிட்டுள்ளது.