#BREAKING 5 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதும் காங்கிரஸ்!

 
s

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி முற்றிலும் சிதைந்தது. திமுகவுடன் ஐந்து தொகுதிகளில் நேரடியாக காங்கிரஸ் மோதுகிறது. 

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்படாமல் நிலுவையில் இருந்தன. வேட்பு மனுதாக்கல் முடிந்த பின்புதான் புதுச்சேரியில் காங்கிரஸுக்கு 16, திமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்பிறகும் சிபிஐ, சிபிஎம், விசிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அத்துடன் திமுக போட்டியிடும் தொகுதிகளிலும் காங்கிரஸ் மனுதாக்கல் செய்து திரும்பி பெறவில்லை. இந்நிலையில் இறுதியாக காலாப்பட்டு, ராஜ்பவன், மங்கலம், திருபுவனை, காரைக்கால் தெற்கு ஐந்து தொகுதிகளிலும் கிமுக- காங்கிரஸ் நேரடியாக மோதுகின்றன.அதே போல் விசிக 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிலும் உழவர்கரையில் விசிகவுடன் காங்கிரஸும், இந்தியகம்யூனிஸ்ட் கட்சியும் மோதுகின்றன.

 

மேலும் விசிக ஊசுடு, நெட்டப்பாக்கத்திலும் களம் இறங்குகிறது. இச்சூழலில் சிபிஎம் கட்சியானது லாஸ்பேட்டை, திருபுவனை தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. அதேபோல் சிபிஐ கட்சியான தட்டாஞ்சாவடியில் இருந்து வாபஸ் பெற்று உழவர்கரையில் மட்டும் போட்டியிடுகிறது. இதுபோல் இண்டியா கூட்டணி முற்றிலும் சிதைந்துள்ளது.