2029இல் ராகுல் பிரதமராவது உறுதி - வேணுகோபால்

 
s

பாஜக வெற்றி பெற முடியாது என்பதால் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க மோடி, அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், “காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர மக்கள் தயாராகிவிட்டார்கள். 2029ஆம் ஆண்டில் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. அதற்கு இந்திய மக்களும், தமிழக மக்களும் தயாராகிவிட்டார்கள். தேர்தலுக்கு காங்கிரஸார் தயாரா? தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய காங்கிரஸ் துணை நிற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நாம் யார் முதுகிலும் குத்தவில்லை. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதையே தடுத்தோம். பாஜக வெற்றி பெற முடியாது என்பதால் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்க மோடி, அமித் ஷா திட்டமிட்டுள்ளனர்.” என்றார்.