ஆளுநர் ரவிக்கு எதிராக காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!!

 
tn

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. 

rn ravi
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை இழிவுபடுத்தி பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு. எம்.ஏ. முத்தழகன், திரு. எம்.எஸ். திரவியம், திரு. ஜெ. டில்லிபாபு, திரு. எம்.பி. ரஞ்சன்குமார், திரு. சிவராஜசேகரன், திரு. அடையாறு த. துரை ஆகியோர் முன்னிலையில், நாளை (27.1.2024) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை ராஜிவ்காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ks alagiri

இதில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.