“2 மடங்கு மகிழ்ச்சியோடு மாணிக்கம் தாகூரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன்”- செல்வப்பெருந்தகை

 
“2 மடங்கு மகிழ்ச்சியோடு மாணிக்கம் தாகூரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன்”- செல்வப்பெருந்தகை

2 மடங்கு மகிழ்ச்சியோடு அன்புச்சகோதரர் மாணிக்கம் தாகூரிடம் பொறுப்பை ஒப்படைக்கிறேன் என தமிழ்நாடு காங்கிரச் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்கவுள்ள மாணிக்கம் தாகூரிடம் கையொப்பமிட்டு பொறுப்புகளை ஒப்படைத்தார் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை. பின்னர் மாணிக்கம்தாகூர் பதவியேற்பு விழாவில் பேசிய செல்வப்பெருந்தகை, “எல்லா மாவட்ட தலைவர்களும் பணியை சிறப்பாக செய்தனர். 2 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றி உள்ளேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கக்கன், இளையபெருமாள் உள்ளிட்டோர் பதவி வகித்ததை விட நான் நீண்ட நாட்கள் தலைவராக பதவி வகிக்க அனுமதித்த தேசிய தலைமைக்கு நன்றி. கக்கன் இரண்டு முறை பதவியில் இருந்தார். இரண்டு முறையும் ஓராண்டிலேயே பதவியிலிருந்து விலகினார். இளையபெருமாள் 10 மாதங்கள் மட்டுமே காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தார். ஆனால் இந்த பட்டியலில் அதிக நாட்கள் நான் காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்துள்ளேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பொறுப்பு ஏற்கும் போது இருந்த மகிழ்ச்சியை விட, இரண்டு மடங்கு மகிழ்ச்சியோடு பொறுப்பை ஒப்படைக்கிறேன்” என்றார்.