“சோதனை நடத்தியதால்தான் ராகுல் காந்தியின் பரப்புரைக்கு என்னால் செல்ல முடியவில்லை?"- ஆதாரங்களை வெளியிட்ட செல்வப்பெருந்தகை
வரிமானவரித்துறை சோதனை நடைபெற்றதற்கான சிசிடிவி ஆதாரங்களை வெளியிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதற்கான ஆதாரங்களை செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவிற்கும், மீண்டும் முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் நன்றி. தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ததில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையில் வாக்களித்துள்ளனர். படப்பையில் ஒரு அலுவலகத்தில் வீட்டில் தங்கியுள்ளேன். என்னுடை வீடு மணிமங்கலம் குக்கிராமம் சிசிடிவி கேமராக்கள் இருக்க வாய்ப்பில்லை. என்னுடைய தேர்தல் வேலைகளை கவனிப்பவர் படப்பை மனோகர், கடந்த தேர்தலிலும் அவர்தான் எனக்காக தேர்தல் வேலை பார்த்தார். இந்தி பேசும் அலுவலர்கள் படப்பை மனோகரன் வீட்டிற்கு வருகை தந்து சிசிடிவி கேமராக்களை அனைக்க முயற்சி செய்தனர். சிறுமாங்காடு ஊராட்சி தலைவர் இல்லத்திலும் அவரது டிராவல்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. பணம் எங்கே என மிரட்டப்படுகின்றனர். நேற்று முன் தினமே எங்களால் வெளியிட்டுருக்க முடியும். ஆனால் தேர்தலுக்காக இதனை செய்கின்றனர் என கூறுவார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தோம் என வெளிப்படையாக கூற வேண்டியது தானே?
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட பணத்தின் விவரங்களையும், NDA கூட்டணி தலைவர்கள், வேட்பாளர்கள் வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட பணத்தின் விவரங்களையும் வருமானவரித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வருமானவரித்துறை சோதனை நடைபெற்றதற்கான சிசிடிவி ஆதரங்களை செல்வப்பெருந்தகை வெளியிட்டு வருமான வரி சோதனை நடைபெறவில்லை என மறைப்பவர்கள் சிசிடிவி, மற்றும் புகைப்படங்களில் உள்ள அதிகாரிகள் யார் என கேள்வியெழுப்பினார். சிறுமாங்காடு பகுதியில் வருமானவரித்துறையினரின் அட்டூழியம் இரண்டு நாட்களில் வெளியிடப்படும். ஒன்றியத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். சந்திரபாபுவும், நிதிஷ்குமாரும் தயாராக உள்ளனர். ஒரு இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும் என்றால் செய்தி குறிப்பு வெளியிட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அல்லவா?” என்றார்.

