தமிழகத்தில் சீமான் கட்சியினர் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது- செல்வப்பெருந்தகை

 
“காங்கிரசை வைத்து தகராறு செய்யாதீர்கள்... எங்க வேதனையை புரிந்துகொள்ளாதீர்கள்”- செல்வப்பெருந்தகை

சீமானின் வாக்குகளும் அவரது ஆதரவாளர்களும் விஜய்யிடம் சென்று விட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “ இந்திய தேர்தல் ஆணையம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம் செய்வதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டி வருகிறது. பாஜக தலைவர்களுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உடனடி அனுமதி கொடுக்கும் தேர்தல் ஆணையம், காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி வழங்க காலதாமதப்படுத்தி பிரச்சாரத்தை முடக்கும்  முயற்சியில் ஈடுபடுகிறது. இன்று தெலுங்கானா  மாநில அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி மதுரையிலிருந்து சிவகாசிக்கு ஹெலிகாப்டரில் வர தேர்தல் ஆணையம்  அனுமதி மறுத்துள்ளது. திமுக கூட்டணியில் நாங்கள் கேட்டது  41 தொகுதி, 41 கிடைக்கவில்லை. 23 கட்சிகள் கூட்டணியில் உள்ள ஒரே ஒரு இயக்கம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. காரைக்குடியில் சீமான் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் சீமானின் வாக்குகள் அவரை பின்தொடர்ந்தவர்கள் எல்லோரும் விஜய்யிடம் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது,  அதை சீமான் கவனிக்க வேண்டும். 140 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த காங்கிரஸ் கட்சியை நேற்று முளைத்த காளான் சீமான் எப்படி பேச முடியும். சீமான் காங்கிரஸ் பற்றி பேச வேண்டாம், நாங்களும் பேசினால் சங்கடம் ஏற்படும்


தமிழகத்தில் சீமான் கட்சியினர் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. காரைக்குடி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மாங்குடி தான் வெற்றி வெற்றி பெறுவார். எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சீமான் இந்த தேர்தலில் மட்டும் எப்படி வெற்றி பெற முடியும்? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படாது, 39 தொகுதி 59 தொகுதியாக மாறும் என பாஜக முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை சொல்வதை தமிழக மக்களும் நாங்களும் நம்ப தயாராக இல்லை. இந்தியா முழுவதும் பாஜக என்ன சதித்திட்டம் செய்தாலும் அதை தோல் உரித்து காட்டுவோம்” என்றார்.