தேர்தலுக்கு பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் - செல்வப்பெருந்தகை அதிரடி

 
“காங்கிரசை வைத்து தகராறு செய்யாதீர்கள்... எங்க வேதனையை புரிந்துகொள்ளாதீர்கள்”- செல்வப்பெருந்தகை

தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நான் இருக்க மாட்டேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நான் இருக்க மாட்டேன். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி ராகுல்காந்தி தெரிவித்துவிட்டேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 2 ஆண்டுகள் மனநிறைவோடு பணி செய்தேன். தேர்தல் முடிந்து வெற்றி வாகை சூடி அந்த வெற்றிக் கனிகளை ராகுல்காந்தியிடம் கொடுத்துவிட்டு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மட்டும்தான் மக்கள் பணி செய்வேன். தேர்தல் முடிந்த பின் தலைவராக இல்லை. உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களின் பிள்ளையாக இருந்தவன் அதன்பின் தமிழ்நாடு மக்களின் பிள்ளையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்தேன். தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டு மக்களின் பிள்ளையாக வேறு யாராவது வேலை செய்வார்கள்” என்றார்.