“காங்கிரசை வைத்து தகராறு செய்யாதீர்கள்... எங்க வேதனையை புரிந்துகொள்ளாதீர்கள்”- செல்வப்பெருந்தகை

 
“காங்கிரசை வைத்து தகராறு செய்யாதீர்கள்... எங்க வேதனையை புரிந்துகொள்ளாதீர்கள்”- செல்வப்பெருந்தகை

திமுக தோழமை கட்சிகள் அவரவர் உரிமைகளை கேட்டு பெறுங்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது பற்றிய பெ.சண்முகம் கருத்துக்கு பதில் அளித்துள்ள செல்வப்பெருந்தகை, “திமுக தோழமை கட்சிகள் அவரவர் உரிமைகளை கேட்டு பெறுங்கள். காங்கிரஸ் கட்சியை வைத்து தகராறு செய்யாதீர். முதலில் 110 தொகுதிகளில் போட்டியிட்டோம், பிறகு 63, பின் 41 இப்போது 28... எங்களது வேதனையை தோழமை கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக மன நிறைவோடு மூன்று தொகுதிகளை கூடுதலாக வாங்கி இருக்கிறோம். உங்களின் உரிமையை கேளுங்கள், முதலமைச்சருக்கு மனம் இருக்கிறது. இருந்தால் கொடுப்பர். காங்கிரஸ் கட்சிக்கு ஏன் கொடுத்தீர்கள் என்றால் எப்படி?” எனக் கேள்வி எழுப்பினார்.