“திமுக உடன் தான் கூட்டணி பேசி வருகிறோம்”- செல்வப்பெருந்தகை

 
தமிழக எம்.பிக்களுக்கு தனி அலுவலகம் கிடைக்க வழிசெய்க - முதலவரை சந்தித்து செல்வப்பெருந்தகை கோரிக்கை..!! தமிழக எம்.பிக்களுக்கு தனி அலுவலகம் கிடைக்க வழிசெய்க - முதலவரை சந்தித்து செல்வப்பெருந்தகை கோரிக்கை..!!

தமிழ்நாடு காங்கிரஸ் திமுக உடன் தான் கூட்டணி பேசி வருகிறோம். எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாதீர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை


சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இந்த செயற்குழு கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்க 52 செயற்குழு உறுப்பினர்கள், 39 சிறப்பு அழைப்பாளர்கள் என 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில்  60 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “இன்றய தினம் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள  மாவட்ட தலைவர்களுக்கு வாழ்த்துக்கள், ஏற்கனவே இருந்த மாவட்ட தலைவர்களுக்கு விரைவில் மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் தமிழக வருகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பல ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளோம். கூட்டணி தொடர்பாக ஏற்கனவே திமுக உடன் தான் பேசி வருகிறோம். முதலமைச்சரை சந்தித்துள்ளோம். அதில் என்ன பிரச்சனை? குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்” என்றார்.