“பழனிசாமி கூட்டணிக்கு யாராவது வருவார்களா என கதவை திறந்து கொண்டு காத்திருக்கிறார்”- செல்வப்பெருந்தகை
எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து கொண்டு யாரவது வருவார்களா என காத்திருக்கிறார். இந்தியா கூட்டணி யாராலும் உடைக்க முடியாத வலிமையான கூட்டணியாக உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனுக்கள் கடந்த 10 ஆம் தேதியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மாவட்ட கமிட்டி அலுவலகங்களிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்திலும் ஏராளமான காங்கிரசார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தங்களது விருப்பமனுக்களை வழங்கி வருகின்றனர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் கடைசி நாளான இன்றும் ஏராளமானோர் தங்களது விருப்பமனுக்களை வழங்கினர். இன்று கடைசி நாள் என்பதால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் மீண்டும் கிளியூர் பகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்ப மனுவை வழங்கினார். இதேபோல் வட சென்னை மேற்கு மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான டில்லி பாபு- பெரம்பூர் தொகுதிக்கும் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம் எஸ் திரவியம் - இராயபுரம் தொகுதிகளுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதேபோல் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று தங்களது விருப்பமனுக்களை வழங்கினர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, தேர்தல் ஆணையம் படிவங்களை எல்லா மாநிலங்களிலும் பிராந்திய மாநிலங்களில் வழங்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஆங்கிலத்தில் வழங்குவது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் ஆணையம் படிவங்களை உடனடியாக தமிழில் வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களை தோழமை கட்சிகள் எங்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டாம். எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்சினையை தோழமை கட்சிகள் பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம். தமிழ்நாடு அரசுக்கு எதிராக, பாஜகவுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது அகில இந்திய தலைமையில் புகார் அளித்துள்ளோம். எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல் எந்த சலசலப்பும் கிடையாது, இந்தியா கூட்டணி சமுத்திரம் போன்றது. இதில் சில அலைகள் வரலாம், போகலாம் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது. எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காக கதவை திறந்து வைத்து கொண்டு யாரவது வருவார்களா என காத்திருக்கிறார். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. யாராலும் கூட்டணியை உடைக்க முடியாது என தெரிவித்தார்.


