”அதிகாரப் பகிர்வு குறித்து மீடியா முன்னாடி ஏன் பேசணும்? என்ன அவசியம் இருக்கிறது.. திமுக தலைமையிடம் தானே பேசணும்” - செல்வப்பெருந்தகை

 
s s

ஆட்சி அதிகாரம் குறித்து மாணிக்கம் தாகூர் பேசியது அவரது கருத்து, காங்கிரஸ் கட்சிக்கு எது தேவையோ  தேவையோ அதனை கூட்டணி கட்சி தலைவரிடம் பேச்சுவார்த்தையில் நாகரீகமாக கேட்டு பெறுவோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 


சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் பதிவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த  செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் எங்களின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர், அவர் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். என்னை பொறுத்தவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை தெளிவாக உள்ளது. நாங்கள் எந்த கட்சியிடமும் கூட்டணி குறித்து பேசவில்லை, திமுகவிடம்தான் பேசி வருகிறோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் தெளிவாக கூறிவிட்டார். இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணி, இதை அசைத்து பார்க்க முயற்சிகள் நடக்கிறது, ஆனால் அசைக்க முடியாது. கருத்து சொல்வதற்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என அனைத்து உரிமையும் உள்ளது. அதனை எங்கு பேச வேண்டும் என இருக்கிறது. நான் தலைவராக இருந்து கொண்டு எல்லாவற்றையும் ஊடகங்களிடமே பேசினால் அது தலைமை பண்பா? எல்லாவற்றையும் ஊடகங்களிடம் பேசிவிட்டால் பின்னர் எதற்கு கூட்டணி கட்சிகள் ? என கேள்வியெழுப்பினார் 

எங்களுக்கு எது தேவையோ அதனை கூட்டணி கட்சி தலைவரிடம் நாகரீகமாக கேட்டு பெறுவோம். அகில இந்திய தலைமை சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது, அதன் அடிப்படையில் பேசி வருகிறோம். எங்களுக்கு தொகுதி வேண்டும் என்றால் முக்கிய கட்சியான திமுகவிடம்தான் கூற வேண்டும். ஊடகத்திடம் பேசினால்.... ஊடகங்களா கூடுதல் தொகுதிகளை பெற்றுத்தரப்போகிறது, அதிகாரத்தை பெற்றுத்தர போகிறது? ஊடகம் முன்பு எதற்காக பேச வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது. இறுதி ஒப்பந்தம் என்ன என்பதை ஊடகத்திடம் நாங்கள் வெளிப்படுத்த போகிறோம். இதைத்தான் தமிமுன் அன்சாரி கவலைப்பட்டு செல்லிவிட்டு சென்றார். காங்கிரஸ் தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். தலைமை என்ன சொல்கிறதோ கட்டுப்பட்டு கூட்டணி கட்சி வெற்றிக்காக செயல்படுவபவர்கள். அரைவேக்காடு, தான்தோன்றிதனமாக செயல்படுபவர்கள் காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல. தேசிய தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவர்கள். பேச்சுரிமை இருக்கிறது அவரவர்கள் பேசுகிறார்கள், நான் அப்படி பேச முடியுமா? கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்லும் போது காங்கிரஸ் கட்சிக்கு தேவையானதை கேட்டுபெறுவேன். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து ஊழல் குற்றாட்டு புகார் வழங்கியது தொடர்பான பதிலளித்த அவர், ஊழல் குறித்த புகாரை ஆளுநரை சந்தித்து யார் கொடுப்பது என இருக்கிறது. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் கூறிய போது உச்சநீதிமன்றம் எதற்கு தடையாணை கேட்டார். எடப்பாடி பழனிசாமி மீது ஆயிரம் குற்றச்சட்டு இருக்கும் போது மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தலாமா? முதலமைச்சர் மீது எனக்கு ஒரே வருத்தம்தான். எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. அனைவரிடத்திலும் தாயுள்ளத்தோடு நடந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவினர் மீதும் தாயுள்ளத்தோடு நடந்துகொள்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பது வேறு. அதே நேரத்தில் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், எவ்வித அசம்பாதவிதமும் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும்.  உச்சநீதிமன்றம் சென்று உரிய பரிகாரம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.