அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தில் உடன்பாடு இல்லை - காங்கிரஸ் அதிரடி

 
Bavankera

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தில் உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.  அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார்.   இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார்.  ஆனால் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி,  எனது தலையை சீவ பத்து கோடி? எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதுமே என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

udhayanidhi stalin

இந்த நிலையில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தில் உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன்கெரா, காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளித்து வருகிறது. திமுக தலைவர்களின் இந்த கருத்தை காங்கிரஸ் கட்சி அனுமதிக்கவில்லை. இதுபோன்றை கருத்துக்களூடன் நாங்கள் உடன்படவில்லை. இவ்வாறு கூறினார்.