“ரூ.5,000 தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என நம்புவது மூடநம்பிக்கை”- பிரவீன் சக்கரவர்த்தி
பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாயை திமுக தலைமையிலான தமிழக அரசு வழங்கி இருந்த நிலையில் அது மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என நம்புவது மூடநம்பிக்கை என காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி விமர்சனம் செய்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது
— Praveen Chakravarty (@pravchak) February 15, 2026
ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை
கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி… https://t.co/Ag5F49gE4z pic.twitter.com/e8wYKzEoDL

இதுதொடர்பாக பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில், “மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது. ஆனால், அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன; 5 தோல்வியடைந்தன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகின்றன. அதில் ஒரு பகுதியாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கி வந்தது இந்நிலையில். தற்போது வரும் மார்ச், ஏப்ரல், மே மாதத்தின் உடன் கோடை சிறப்பு தொகுப்பு ரூ 2000 என மொத்தமாக ரூபாய் 5000 உரிமைத் தொகையை அந்தந்த பெண்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு செலுத்தியது.