வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு.. மேலூருக்கு இதுவரை வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி
Apr 5, 2026, 09:52 IST1775362950216
வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், இதுவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்காததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு சட்டப்பேர்வை தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் செய்ய நாளை ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலூர் தொகுதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் நடக்க இருக்கும் 234 தொகுதிக்கான தேர்தலில், இதுவரை 3000க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும்.

