ஒன்றிய அரசு விழாவில் பிரதமருடன் நயினார் நாகேந்திரன் எப்படி அமர முடியும்?- மாணிக்கம்தாகூர்
ஒன்றிய அரசு விழாவில் பிரதமருடன் நயினார் நாகேந்திரன் எப்படி அமர முடியும்? பாஜக மாநிலத் தலைவருக்காக அரசு விழாவின் நெறிமுறைகளை மாற்ற முடியுமா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

How Annan Nainar Nagendran can sit in the union government function with Prime Minister ?
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) October 11, 2026
For BJP State President protocol can be changed? pic.twitter.com/p90QDPARpo
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மாணிக்கம் தாகூர், “13,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிகழ்வில் நிதின்கட்கரி கலந்து கொள்ளாதது ஆச்சர்யமாக உள்ளது. அதேசமயம், எந்த பொறுப்பிலும் இல்லாத எம்.எல்.ஏ, எம்பி இல்லாத நயினார் நாகேந்திரன் எப்படி மேடையில் உட்கார்ந்திருக்கிறார். எந்த புரோட்டோகாலில் பிரதமர் மோடியுடன் மேடையில் நயினார் நாகேந்திரன் அமரவைக்கப்பட்டார் என்பது வியப்பாக உள்ளது. ஒன்றிய அரசு விழாவில் பிரதமருடன் நயினார் நாகேந்திரன் எப்படி அமர முடியும்? பாஜக மாநிலத் தலைவருக்காக அரசு விழாவின் நெறிமுறைகளை மாற்ற முடியுமா? கடந்த தேர்தலில் சாத்தூரில் தோற்றுப்போன நயினார் நாகேந்திரனை இன்று மோடி அவர்கள் மேடையில் அமரவைக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

