“லஞ்ச பழக்கம் மாற டைம் ஆகும்”- மாணிக்கம் தாகூர்

 
R.S. பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார் - மாணிக்கம் தாகூர்

குதிரை பேர விவகாரம் திமுக,அதிமுக,பாஜக நடத்தும் அரசியல் நாடகம் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, "லஞ்சம் தர மாட்டோம், லஞ்சம் பெற மாட்டோம்" என்ற உறுதிமொழியை ஏற்று, அதனை உறுதிப்படுத்தும் வகையில் கைரேகை பதித்து, ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம்தாகூர், “தேர்தலுக்கு முன்பும் பின்பும் பல கட்சிகளில் இருந்தும் ஆட்கள் உள்ளே வந்திருப்பதால், அவர்களின் பழைய லஞ்ச பழக்கவழக்கங்கள் மாறுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். அதற்காக கீழ்மட்ட நிர்வாகி ஒருவர் செய்யும் தவறை, ஒட்டுமொத்த தலைவரின் உயர்ந்த கொள்கையோடு ஒப்பிட கூடாது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்.


ஆளும் தரப்பு பணமோ பதவியோ கொடுத்து மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதே குதிரை பேரம். தற்போதைய பேரப் புகாரில் பின்னணியில் யார் இருக்கிறார்கள், கைதானது யார் என்பதை ஆராய்ந்தாலே உண்மை வெளிவரும், போலீஸிடம் முறையிடாமல் ஆளுநரிடம் முறையிடுவது வெறும் அரசியல் நாடகம். குதிரை பேர விவகாரம் திமுக,அதிமுக,பாஜக நடத்தும் அரசியல் நாடகம். எப்படி ஒரு கட்சியை அழிக்க முடியும் என்று யாராவது PhD செய்தால், அதில் முக்கிய கதாபாத்திரமாக திரு எடப்பாடி இருப்பார். முதலில் அவர் தன் கட்சியை பிழைக்க வைக்கும் வழியைப் பார்க்கட்டும்” என்றார்.