“கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது” - மாணிக்கம் தாகூர்

 
“கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது” - மாணிக்கம் தாகூர்

தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.


தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் பேசப்பட்டவை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுக்கும் நிலை, தோழமை கட்சிகள் என்ற நிலை, கூட்டணி அமைக்கும் நிலை என்பதுதான் அது. ஜனநாயகத்தில் கலந்து ஆலோசிப்பது என்பது அவசியம். ஆலோசனை கூட்டம் நேர்மறையாக இருந்தது. அனைவரின் கருத்துக்களும் பரிமாறப்பட்டது. விரைவில் அடுத்த கூட்டம் நடைபெற உள்ளது. தவெகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரட்டும் அதன்பிறகு இந்தியா கூட்டணி குறித்து பேசலாம். மதசார்பற்ற ஆட்சி என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

யார் யாரெல்லாம் எம்.பிக்கள் வைத்தார்களோ அவர்கள்தான் INDIA கூட்டணியில் இருக்கிறார்கள். எப்போது தவெகவிற்கு எம்பிக்கள் வருகிறார்களோ அப்போது உடனடியாக INDIA கூட்டணி பற்றி பேசுவோம்.இந்தக் கூட்டணிக்கு ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். அடுத்து பொதுவான குறிக்கோள் ஒன்றை அமைக்க வேண்டும். மேலும், இதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களையும் அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளோம்” என்றார்.