கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தும் எடுபடவில்லை- கார்த்தி சிதம்பரம்

 
karthik chidambaram

பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் எந்தவித தடையும் கிடையாது என்று தீர்ப்பளித்தது தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

karti chidambaram


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்பி கார்த்தி சிதம்பரம், “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி. இந்த வெற்றி இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ்காரர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது .கர்நாடகா தேர்தல் வெற்றி என்பது பாஜகவின் ஊழல் அரசாங்கத்திற்கும், பிரிவினை வாத அரசியலுக்கும் கர்நாடகா மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடி நேரடியாக வந்து பிரச்சாரம் செய்தும் அவருடைய பிரச்சாரம் எடுபடவில்லை.

கள்ளச்சாராயம் விற்பனை, தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவைகள் அதிகார வர்க்கத்திற்கு தெரியாமல் நடப்பது கிடையாது. அதிகார வர்க்கத்திற்கு தெரிந்து தான் நடந்திருக்கிறது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். குண்டர் சட்டத்தை பயன்படுத்த போவதாக முதலமைச்சர் அறிவித்ததை வரவேற்கிறேன். மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் ஏன் கொடுத்தீர்கள்? என்று கேட்பது தவறு. பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் எந்தவித தடையும் கிடையாது என்று தீர்ப்பளித்தது தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.