“இதையெல்லாம் சொல்வதற்கு எதற்கு ஒரு அரசு? பேசாமல் ராஜினமா செய்துவிட்டுப் போங்கள்”- ஜோதிமணி காட்டம்

 
புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஜோதிமணி எம்.பியின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கை 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ன்று டெல்லியில் பிரதமர் மோடி பயணிக்கும் போது பிரதமர் வாகனத்தை தவிர ஒரே ஒரு பாதுகாப்பு வாகனம் மட்டுமே பயன்படுத்தபட்டுள்ளது.


Cஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோதிமணி எம்பி, “ஒழுங்காக இருந்த நாட்டை  12 ஆண்டுகால மோடி ஆட்சியில்,  குட்டிச் சுவராக்கிவிட்டு,இந்த இரண்டு கார்  நாடகத்திற்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை. இதனால் ஆகப்போவது என்ன? சரிந்துபோன பொருளாதாரம் மீண்டெழுந்துவிடுமா? மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற நெருக்கடி மாறிவிடுமா? தங்கம் வாங்காதே,வெளிநாடு போகாதே, வாகனங்கள் ஒட்டாதே, வீட்டில் இருந்தே வேலை செய் இதையெல்லாம் சொல்வதற்கு எதற்கு ஒரு அரசு? பேசாமல் ராஜினமா செய்துவிட்டுப் போங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.