எல்.முருகன் தான் தமிழக மக்களை அவமதித்துள்ளார் - ஜோதிமணி எம்.பி., குற்றச்சாட்டு

 
jothimani

தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் பாஜகவை பாதுகாக்க முயன்ற ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தான் தமிழ்நாட்டு மக்களை அவமதித்திருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார். 

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதி வழங்காதது தொடர்பான நீலகிரி எம்.பி திரு.அ.ராசா அவர்களின் கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் அவையில் தமிழக எம்.பிகளுக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதி தராமல் துரோகம் செய்வதை மறைக்கவே பாஜக சாதியை அவமதித்து விட்டதாக நாடகம் ஆடுகிறது. 


நியாயமாகப் பார்த்தால் தமிழ்நாட்டு நலன்களுக்காகப் போராடும் எங்களுடன் நிற்காமல்,தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்யும் பாஜகவை பாதுகாக்க முயன்ற மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு.முருகன் தான் தமிழ்நாட்டு மக்களை அவமதித்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.