ராகுலை சந்தித்து வாழ்த்து பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
தேர்தலில் வென்ற தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராகுல்காந்தியை சந்தித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின் திமுகவுக்கு தோல்வி முகம் ஏற்பட்டதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததை அடுத்து தவெக ஆட்சி அமைத்தது. வருங்காலங்களிலும் இந்த கூட்டணியே தொடரும் என்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆட்சியில் பங்கு என உறுதியளித்துள்ள முதலமைச்சர் விஜய் காங்கிரசையும் அமைச்சரவையில் இணைத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.
This time, Tamil Nadu has stood for change and aspirations. @INCTamilNadu MLAs met me and we discussed aspects of strengthening the party in the state.
— Mallikarjun Kharge (@kharge) May 14, 2026
Wishing the new government success in fulfilling the dreams of the people. pic.twitter.com/TOSfd18gB5
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற 5 எம்எல்ஏக்களை மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ராகுலைச் சந்திப்பதற்காக இன்று டெல்லிக்கு அழைத்து சென்றார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் இன்று மாலை ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து எக்ஸ் ட்தளத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, “இந்த முறை, காங்கிரஸ் தமிழ்நாடு மாற்றத்திற்கு ஆதரவாக நின்றிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் என்னைச் சந்தித்து, மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து விவாதித்தனர். மக்களின் கனவுகளை நனவாக்குவதில் புதிய அரசு வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

