“அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”- செல்வப்பெருந்தகை

 
 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

அம்பேத்கர் குறித்து தனது வக்கிர கருத்துகளை கூறிய அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

ஹெச்.ராஜாவை தமிழக மக்களே நாட்டை விட்டு வெளியேற்றுவர் - செல்வப்பெருந்தகை தாக்கு..

ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின் மேடையில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “அதானி  இந்திய அதிகாரிகளுக்கு எத்தனை ஆயிரம் கோடிகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதானி  தொழில் எந்த விதத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதானி தொழில் நியாயமான முறையில் நடக்கிறதா, எத்தனை அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்துள்ளார் என்பது குறித்து அமெரிக்கா கூறி உள்ளது. மத்திய அரசு அதானி என்ற ஒற்றை நபருக்காக தேசத்தை அடகு வைக்கிறது. பங்குச்சந்தை ஊழலுக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அதானி பெரிய ஊழல் நடத்தியுள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என அந்நிய நாடுகள் சொல்லும் போது ஏன் இந்தியா மறுக்கிறது?

இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து அதானி தொழிலை நடத்தி வருகிறார். உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுலா செல்லும் பாரத பிரதமர் மணிப்பூர் செல்லாததற்கான காரணம் என்ன? மணிப்பூர் இந்தியாவின் மாநிலம் தானே? தமிழக அரசு நிதி கேட்டால் கொடுக்க மறுக்கிறீர்கள். தமிழக அரசு கொடுக்கும் வரி பணத்தில் எங்கள் பங்களிப்பை தாருங்கள் என்றால் மறுக்கிறீர்கள். தமிழ்நாட்டின் உரிமையை, மாநிலத்திற்கான சுயாட்சியை பேசுங்கள் என்றால் மத்திய அரசு பேச மறுக்கிறார்கள். ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போது வீட்டுக்கு அனுப்பினால் வீட்டுக்கு செல்வோம், சிறைக்கு அனுப்பினால் சிறைக்கும் செல்லவும் தயாராக இருக்கிறோம்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “அதானி ஊழலை கண்டித்தும், மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று  ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் சிபிஐ, வருமானவரித்துறை என சோதனைகள் செய்கிறார்கள். 
ஆனால் அதானி மீது இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? அதானி மீதான குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்பேத்கரை பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். அம்பேத்கருடைய பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் அவருடைய திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியவர்கள் மக்களவையில் அம்பேத்கர் பற்றி பேசினால் இவர்களுக்கு பிடிப்பதில்லை, இதுதான் பாசிச பாஜக அரசு. அம்பேத்கரின் மீதும், அவர் இயற்றிய இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. அம்பேத்கர் பற்றி பேசியதற்காக அமித்ஷா பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.