பள்ளியில் குடிக்கும் நீரில் மலம்- சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

 
செல்வ பெருந்தகை

திருவந்தார் கிராமத்தில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடிக்கும் நீரில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கு.செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவரான கடைசி நிமிட பின்னணி என்ன?  - BBC News தமிழ்

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம், திருவந்தார் கிராமத்தில உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடிக்கும் நீரில் மலம் கலந்துள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மனிதக்குலத்துக்கே விரோதமான, அநாகரிகத்தின் உச்சமான, அருவருக்கத்தக்க செயல். நாகரீக சமுகத்தில் வாழத்தகுதியற்ற கொடியவர்கள் செய்யும் இந்தக் கேவலமான செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

வேங்கை வயலில் மக்கள் பயன்பாட்டில் இருந்த குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் இந்தியளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருக்கிறது என்று செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த இழிசெயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது யார் காரணமாக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து இதுபோன்ற இழிவான சம்பவம் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.