அண்ணாமலை என்னை மிரட்ட முடியாது- செல்வப்பெருந்தகை

 
அண்ணாமலை செல்வப்பெருந்தகை

அண்ணாமலையைப் போல் கோழை வேறு யாருமில்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

tt

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும்  செல்வபெருந்தகை இருந்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செல்வபெருந்தகையை ரெளடி என்றும்  குண்டர் வழக்கில் சிறை சென்றவர் எனவும் அவதூராக பேசியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, “வழக்கு எனக்கூறி எல்லோரையும் மிரட்டுவதுபோல் அண்ணாமலை என்னை மிரட்ட முடியாது. அண்ணாமலையைப் போல் கோழை வேறு யாருமில்லை. இறந்தவர்கள் மீது குற்றம் சுமத்துவதுதான் அவரின் தரம். எல்லா வழக்குகளையும் பார்த்தவன், நெருப்பாற்றை நீந்தி கடந்தவன் நான்” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.