ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றம் - தமிழக சுகாதாரத்துறை தகவல்

 
evks

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளாங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 87 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன் பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு  போட்டியிடவில்லை. எம்பி பதவிக்கு மட்டுமே போட்டியிட்டுள்ளார். இந்நிலையில்,   ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் மாரடைப்பு காரணமாக மறைந்ததை அடுத்து அத்தொகுதியில் போட்டியிட்டு அந்த இடைத்தேர்தலில் வென்ற அவர், கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தற்போது சீராக உள்ளது. மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.