“வாங்க மத்த பிரச்சனைகளை அடுத்து மாதம் வரை தள்ளி வைப்போம்”- மாணிக்கம்தாகூர் பரபரப்பு பதிவு
நம் உட்கட்சி விவகாரத்தை ஒதுக்கி வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு உழைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம்தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “மத்திய தேர்தல் குழு என்பது காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த முடிவு எடுக்கும் அமைப்பாகும். பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு, விரிவான விவாதத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் முன்னிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கடினமாக உழைத்த பல காங்கிரஸ் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு, நமக்கு வெறும் 28 இடங்கள் மட்டுமே உள்ளதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை நாம் அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அறிவிக்கப்பட்ட 27 வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த 27 இடங்களிலும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம். தமிழ்நாட்டை பின்வாசல் வழியாக Fort St. George கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் இருந்து காக்க வேண்டிய போராட்டம் இது. இந்நேரத்தில் நாம் நம் உட்கட்சி விவகாரத்தை ஒதுக்கி வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் கொண்டு உழைக்க வேண்டும்.
மத்திய தேர்தல் குழு என்பது காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த முடிவு எடுக்கும் அமைப்பாகும். பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு, விரிவான விவாதத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு காங்கிரஸ் தலைவர் Mallikarjun Kharge அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi… https://t.co/Rzvo0NGKEN
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) April 3, 2026
அமித்ஷா அதிமுகவை 2019,2021, 2024 என்று மூன்று முறை போல இந்த முறை மீண்டும் தோற்கடிக்க வேண்டும். வாங்க மத்த பிரச்சனைகளை அடுத்து மாதம் வரை தள்ளி வைப்போம். கடமைக்கு கட்டுப்பட்ட ஒழுக்கமான படைவீரர்களாக, நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரிகளை எதிர்த்து போராட வேண்டும். நேருவின் அண்ணாவின் வாரிசுகள் நாம் வீழ்ந்தால் கோட்சேவின் வாரிசுகள் வெற்றி பெறுவார்கள் . 200 இடங்களை வெல்லும் இலக்குடன் ஒற்றுமையாக செயல்படுவோம். மீண்டும் வெற்றி பெறுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

