தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது- மாணிக்கம்தாகூர்
தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் பிக்பாஸ் போல் இருப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கதாகூர், “என்டர்டெயின்மென்ட் துறையில் இருந்து வந்ததால் சீமான் பொழுதுபோக்காக பார்க்கிறார்; அண்ணன் சீமான் எல்லாவற்றையும் குறை சொல்ல பிறந்தவர் முதல்முறையாக சட்டமன்றம் நேரலை செய்யப்படுகிறது. அதை வரவேற்க வேண்டும். தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி தொடர்கிறது. இபிஎஸ் அரசியல் ரீதியாக தொடந்து தவறுகளைச் செய்கிறார். அண்ணன் சீமான் எல்லாவற்றையும் குறையாகப் பார்க்கிறார். எண்டர்டெயின்மென்ட் துறையில் இருந்து வந்ததால் பொழுதுபோக்காகப் பார்க்கிறார்.
ரீல்ஸை கேவலமாக நினைக்கக்கூடாது. ஊடகத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் ரீல்ஸ். நாடகங்கள், சினிமாக்கள் இருந்தன. விடிய விடிய கட்சிக் கூட்டங்கள் நடந்தன, அந்த காலம் முடிந்துவிட்டது. ஒரு விஷயத்தை 30 நொடிகளுக்குள் சுருக்கமாக சொல்லும் பழக்கத்தை ரீல்ஸ் கற்றுக் கொடுக்கிறது. ரீல்ஸாக வருவதற்காக சில விஷயங்கள் நடக்கின்றன. இதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும். ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; முதல்வராக விஜய் தொடர வேண்டும்; நல்லாட்சி தர வேண்டும். எங்களை நம்பி வந்தவர்களுக்கு உயிரைக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் குணமே” என்றார்.

