“இந்த நக்கல்லாம் எங்க கிட்ட வேண்டாம்! காங்கிரஸ் கட்சி தொட்டால் திருப்பி அடிப்போம்”- மாணிக்கம் தாகூர் அதிரடி
எங்களை துரோகி என கூறினால் நாங்கள் திருப்பி அடிப்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற பின் நிகழ்ச்சியில் பேசிய மாணிக்கம் தாகூர், “எனக்கும் திமுகவின் ஆர் எஸ் பாரதி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் என்ன வாய்க்கால் பிரச்சனையா? காங்கிரஸ் கட்சியை அடித்தால் நானும் திருப்பி அடிப்பேன். காங்கிரஸை தீண்டுபவர்கள் திமுக, அதிமுக, பாமக என யாராக இருந்தாலும் சரி காங்கிரஸ் கட்சியை அடித்தால் திருப்பி அடிப்பேன். திமுகவினர் பேசாமல் இருந்தால், நாங்களும் எங்க பாட்டுக்கு எங்க வேலைய பாத்துட்டு இருப்போம். ஆனால் எங்களை துரோகி என கூறினால் நாங்கள் திருப்பி அடிப்போம். எங்களை நக்கல் செய்தாலோ, துரோகி என்றாலோ கடுமையான பதிலடி இருக்கும். செல்வப்பெருந்தகை தலைவர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிச்சிருங்கனு சொன்னதால இந்த மாற்றம் நடந்திருக்கு. 2029-ல் ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே.. ஒண்ணு ராகுல் காந்தி, இன்னொன்னு மோடி. அன்புமணி அவர்களே நீங்க எதுக்கு இப்போ இதுல ராகுல் காந்திய இழுத்து விடுறீங்க? ராகுல் காந்திய பத்தி எதனா சொன்னா அவ்வளவு தான் அது அன்புமணியா இருந்தாலும் சரி, சீமானா இருந்தாலும் சரி திருப்பி அடிப்போம்.
இது தனது அரசியல் பயணத்தில் மிகவும் முக்கியமான தருணம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் தங்களின் இயக்கம் தற்போதைய கூட்டணியில் ஆட்சியில் பங்கேற்றுள்ளது. மேலும், அடிமட்ட அளவில் கட்சியை இன்னும் பலமாக வலுப்படுத்தவும், தொண்டர்களுடன் தோளோடு தோள் நின்று மக்களுக்கான நற்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் நான் முழுமையாக உறுதியுடன் உழைக்கப் போகிறேன்” என தெரிவித்தார்.

