“காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை”- கே.எஸ்.அழகிரி
Updated: Jan 6, 2026, 17:22 IST1767700320228
திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் கட்சி நீடிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தொடர வேண்டும். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கும், அதிக தொகுதிகள் வேண்டும் என கேட்பதில் தவறில்லை. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதித்தால், அது மிகவும் தவறு. அது இன்னும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஏன் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என்ற காரணம் எனக்கு தெரியவில்லை. அதில் உள்நோக்கம் இருந்தால் அது தவறு” என்றார்.


