ஒரே நாடு ஒரே தேர்தல்- மோடி அதிபராக முயற்சி: கே.எஸ்.அழகிரி

 
ks alagiri

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதுசாத்தியமல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்

Ks Azhagiri


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தனியார் மண்டபத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே ஆர் ராமசாமி, திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “ நமது இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல, இது ஒரு கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோத செயல். மோடி அதிபராக முயற்சி செய்கிறார். அவர் தேர்தல் அரசியலை சந்திக்க விரும்பவில்லை.. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த திட்டம்

இப்போது உள்ள சூழ்நிலையில் இது சாத்தியமற்றதாகும். இதனை சாத்தியப்படுத்த முயற்சித்தால் தோல்வி அடையும் அல்லது புரட்சி வெடிக்கும்” என்றார்.