4 லட்சம் ரூ.2000 நோட்டுகள் எங்கே உள்ளது?- கே.எஸ்.அழகிரி

 
ks alagiri

முன்னாள் பாரதப் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவு தினம் இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது. 

Image

 

அந்தவகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு  தமிழகத்தில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருப்பெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி நினைவு தின உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “மோடி துக்ளக் தர்பார் ஆட்சி செய்து வருகிறார். எந்த ஒரு திட்டங்களும் அறிவிப்புகளும் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்காமல் மீண்டும் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த நிலையில், அதில்  பாதி அளவு தான் உள்ளது. மீதி நான்கு லட்சம் 2000 ரூபாய் நோட்டுகள் எங்கே?  இன்னும் 4 லட்சம் கோடிக்கான 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவேண்டும்.

Image

தமிழகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரின் சிறந்த  திட்டங்களை கர்நாடகா காங்கிரஸ் அரசு வாக்குறுதியாக அறிவித்துள்ளது. திமுகவின் நல்ல செயல் திட்டங்களை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். கர்நாடகா தோல்வியை மறைக்கும் தந்திரமே ரூ.2000 நோட்டை திரும்பப்பெறும் என்ற அறிவிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் சுமார் 89% 2017 மார்ச் மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டன. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, 2018 மார்ச் 31 அன்று ரூ.6.73 லட்சம் கோடியாக (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) இருந்த நிலையில் 2023 மார்ச் 31 அன்று ரூ.3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இது புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே ஆகும். இந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.