கர்நாடகா வெற்றியை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது- கார்த்தி சிதம்பரம்

 
karti chidambaram

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து காரைக்குடி பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

karthik chidambaram

கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “மாநில தலைமைக்கு முக்கியத்துவம் தந்து அகில இந்திய தலைமையுடன் இணைந்து பணியாற்றியதால் தான் இந்த வெற்றி சாத்தியமாகியது. 6 மாதத்திற்கு முன்பே மக்கள் நலத்திட்டங்கள்  என்ன செய்ய உள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்த்தது பெருமளவில் கை கொடுத்துள்ளது. இந்த வெற்றி உற்சாகம் அளித்துள்ள போதும், இதை வைத்து பாராளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது என்பது என்னுடைய கருத்து

வெளிமாநிலங்களுக்கு சென்று எங்களுடைய எம்பி, எம்.எல்.ஏக்கள் பார்வையாளராக தேர்தல் பணியாற்றியது கட்சிக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தியது. கர்நாடக மக்கள் பாஜகவின் நிர்வாக குளறுபடி, கரப்சன், கமிசன் இவற்றுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து பிரச்சாரத்திற்கு சென்ற அண்ணாமலையின் டயர் பஞ்சர் ஆகி உள்ளது.
அடிகடி பிரகடனம் செய்து, பிரச்சாரம் செய்தவரின் பாட்சா பலிக்கவில்லை. கர்நாடகாவிலும் சென்று பிரகடனம் செய்து பிரச்சாரம் செய்தது எடுபடவில்லை.

கர்நாடகாவில்  140 இடங்களை காங்கிரஸ் பிடிக்கும் என ஒரு மாதத்திற்கு முன்பே  தெரிவித்திருந்தேன். 2024 தேர்தலுக்கு முன்பு ராகுல் காந்தி எம்பி பதவி திரும்ப கிடைக்கும். அவர் 2024 தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார்” என்றார்.