காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது- திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டனம்
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தவெகவுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறது. அதில் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் எடுத்த நிலைபாடு கடும் கண்டத்திற்குரியது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி என்றும் விமர்சித்துள்ளது. தோழமை கட்சியின் காலை வாரிய காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுவதாகவும் திமுக தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. திமுக கூட்டணியினர் உழைப்பை பெற்று விட்டு வெறும் மூன்றே நாட்களில் மாற்றுக் கட்சிக்கு காங்கிரஸ் கட்சி சென்றுள்ளது கண்டனத்துக்குரியதாகவும் கூறியுள்ளது.

