“ஒன்னு ஆளுங்கட்சி இல்லையெனில் எதிர்க்கட்சி”- கிரிஷ் சோடங்கர்
பாஜக தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க முதன்முறையாக பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக காங். தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டியளித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். ஆனால் இனிமேலும் நாங்கள் ஒரு நடுநிலை சக்தியாக இருக்க முடியாது. ஒன்று ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும். அல்லது எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும். திமுக கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. முதலமைச்சராக மு.க.ஸ்டாலினே மீண்டும் வருவார். ளது. பாஜக தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க முதன்முறையாக பல கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. இனி அதிகாரமற்று இருக்கமாட்டோம். ஆட்சியில் பங்கு வேண்டும். நாங்கள் தற்போது கட்சியை புத்துயிர் பெற செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். பூத் கமிட்டி, கிராம கமிட்டி போன்ற அடிமட்ட அளவிலான அமைப்புகளை பலப்படுத்தும் பணிகளை தமிழக காங்கிரஸ் ஏற்கனவே தொடங்கிவிட்டது.” என்றார்.

